இந்தியாவும் பாகிஸ்தானுமே உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரும்போது நயன்தாராவும் சிம்புவும் வர மாட்டார்களா என்ன ஜெயம் ரவி கொடுத்த மதி மயங்கும் சுதி பார்ட்டியில் நேருக்கு நேர் வார்த்தைகளால் மோதிக் கொண்ட சிம்புவும் நயன்தாராவும்.

அது நடந்து சில நாட்களிலிலேயே வேறொரு பார்ட்டியில் கலந்து கொண்டதும் கட்டி பிடித்துக்கொண்டதும் உண்மையாக இருந்தாலும்.த்ரிஷாவின் பர்த்டே பார்ட்டியில் எடுக்கப்பட்ட அந்த படத்தை திட்டமிட்டே ட்விட்டரில் வெளியிட்டாராம் த்ரிஷா.

எவருக்கு எதற்கு ஏன் இந்த வேலை என்று கேட்டபோது ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க..? என்பதை நாட்டுக்கு அறிவிக்கும் மிகப்பெரிய திட்டம்தான் அந்த போட்டோ கசிய விட்ட கதை. அந்த பார்ட்டியில் நடந்ததென்ன? பல வாரங்கள் கழித்து இப்போது லேசாக வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. வேறொன்றுமில்லை.

ஒரு தனி அறைக்குள் த்ரிஷா, நயன்தாரா, சிம்பு மூவரும் அமர்ந்து கொண்டு எதிர்காலத்தை பற்றி விடிய விடிய பேசினார்களாம். இந்த சந்திப்பில் இருவரையும் சமாதானப்படுத்த பெரிதும் முயன்றவர் த்ரிஷாதானாம். ஒரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்த நயன்தாராவும் த்ரிஷாவும் இப்போது இந்தளவுக்கு மாறியிருப்பதுதான், எப்படி என்று தெரியவில்லை. காதல் ஜோடி மீண்டும் இணைய வேண்டும் என்ற ஆசையில் செய்தாரம். இவர்கள் இருவருக்குமிடையில் சமாதான கோடியை அசைத்து வைத்தாராம் த்ரிஷா.

 
Top