சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்குள் வந்து ஜெயித்தவர்களில் சந்தானத்துக்கும், சிவகார்த்திகேயனுக்கும் எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.
இருவருமே விஜய் டிவியிலிருந்து சினிமாவில் கொடிகட்டிப் பறப்பவர்கள். என்னதான் வந்த இடம் ஒரே இடமாக இருந்தாலும் சினிமாவுக்குள் இருவரும் எலியும், பூனையுமாகத்தான் இருக்கிறார்கள் என்ற பேச்சு பரவலாக கோடம்பாக்கத்தில் அடிபட்டு வருகிறது.
அது உண்மைதான் என்பது போல தமிழ்சினிமாவில் எல்லா இளம் ஹீரோக்களுடனும் இணைந்து நடித்து விட்ட சந்தானம் சிவகார்த்திகேயனுடன் மட்டும் சேர்ந்து நடிக்கவே இல்லை.
மிர்ச்சி சிவா, சந்தானம் இணைந்து நடித்த ‘யா யா’ படத்தில் கூட அப்படத்தின் டைரக்டர் சிவகார்த்திகேயனை ஹீரோவாக கமிட் செய்து வைத்திருக்க, சந்தானமோ மிர்ச்சி சிவாவை ரெகமெண்ட் செய்ததாக சொல்லப்பட்டது.
அதேபோல இருவரும் எந்த ஒரு சினிமா பங்ஷன்களிலும் ஒன்றாக மேடைகளில் தோன்றியதில்லை. இப்படி சந்தானம் – சிவகார்த்திகேயனுக்கு இடையே ஒரு பனிப்போரே இருந்து வருகிறது என்பதற்கு பல உதாரணங்கள் இருந்ததால் இன்று அந்த சந்தேகத்துக்கு பதிலளித்தார் சந்தானம்.
‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் சக்சஸ் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட சந்தானத்திடம் இதுபற்றி சீனியர் நிருபர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சந்தானம் “ நானும் அவரும் சேர்ந்து நடிக்கிற மாதிரியான ஸ்க்ரிப்ட் அமைஞ்சா கண்டிப்பா சிவகார்த்திகேயனோட சேர்ந்து நடிப்பேன். அவர்கூட எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றவர் அதற்கு கமல் சொன்ன ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டினார்.
கமல் சார் ஒரு தடவை சினிமாவைப் பத்தி சொன்னார். சினிமாங்கிறது காடு மாதிரி. நாங்கெல்லாம் அதுல மிருங்கள், அந்தக் காட்டுக்குள்ள என்ன கெடைக்குதோ அதை அந்த மிருகங்கள் சாப்டுட்டு போவும். அதேமாதிரி தான் சினிமாவும். இங்க யாரும் யாரோட இடத்தையும் பிடிக்க முடியாது. எனக்கு கெடைக்க வேண்டியது எனக்கு கெடைச்சுக்கிட்டுத்தான் இருக்கும். அதை யாரும் தடுக்க முடியாது. இப்படித்தான் சினிமாவுல என்னோட கேரியரை நான் ஓட்டிக்கிட்டிருக்கேன் என்றார்.
ஏதோ சொல்றீங்கன்னு நாங்களும் நம்புறோம் நம்பலாம் தானே சந்தானம் ஜி…