என்னதான் மீடியாக்கள் மத்தியில் மாமன், மச்சான் என்று பேசிக்கொண்டாலும் இளம் ஹீரோக்கள் மத்தியில் போட்டியும் பொறாமைகளும் கூடப்பிறந்த பொறப்பாகத்தான் இருக்கின்றன.

நேத்து வந்தவன் நம்மை விட அதிகமாக சம்பளம் வாங்குறானே என்ற கடுப்போடு தான் ஒருவர் மீது ஒருவர் இருக்கிறார்கள். தப்பித் தவறி யாராவது ஒரு இளம் ஹீரோவின் படம் ப்ளாப்பாகி தொலைத்து விட்டால் அவ்வளவு தான். அன்று இரவே விடிய விடிய சரக்கு சகிதம் உட்கார்ந்து அந்த தோல்வியை சக ஹீரோக்கள் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.

இப்போதுள்ள இளம் ஹீரோக்களில் விமல், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் இந்த மூன்று பேர்களுக்கும் மத்தியில் தான் பெரும் போட்டி நிலவி வருகிறது. மேடைகளில் மூவரும் ஒருவரை மற்றொருவர் புகழ்ந்து பேசிக் கொண்டாலும் நிஜமோ வேறு மாதிரியாக இருக்கிறது.

இதில் விமலும், விஜய்சேதுபதியும் கூட்டணி அமைத்துக் கொண்டு சிவகார்த்திகேயனுக்கு எதிராக வேலைகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார்களாம். அவர்களைத் தேடி வருகிற எந்தப்பட வாய்ப்பும் தப்பித்தவறி கூட சிவகார்த்திகேயன் பக்கம் போய் விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் இந்த இரண்டு ‘வி’ ஹீரோக்களும் பெரிய அளவில் சம்பளக்குறைப்பில் ஈடுபட்டிருக்கிறார்களாம். சம்பளத்தைக் குறைத்தாவது  சிவகார்த்திகேயனை தேடிப்போகும் வாய்ப்புகளை வளைத்து விட வேண்டும் என்பது தான் இவர்களின் புதுக்கணக்கு.

அந்தளவுக்கு சிவகார்த்திகேயனின் அசூர வளர்ச்சியை ‘வி’ ஹீரோக்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையாம்.
 
Top