நடிகை சமந்தாவும் நடிகர் சித்தார்த்தும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சித்தார்த்துக்கு டீன் ஏஜ் வயதில் பையன் இருப்பதாகவும், அதை மறைத்துவிட்டு சமந்தாவிடம் அவர் பழகிவருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டன.

இதனால் ஆத்திரமடைந்துள்ள சித்தார்த் கிசுகிசு எழுதிவரும் ஊடகங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: என்னைப் பற்றியும், எனது குடும்பத்தினர் பற்றியும் தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருகின்றனர்.  இது என்னை மிகவும் பாதிக்கிறது. எனக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது. இன்னும்கூட என்னை குழந்தை என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் வந்த ஒரு கட்டுரையில் என்னைப்பற்றி கற்பனைக்கும் எட்டாத தகவலை வெளியிட்டுள்ளனர். என் வாழ்க்கையை பற்றி தவறாக எழுதி என்னை சீண்டி பார்க்காதீர்கள். எனக்கு 35 வயதுதான் ஆகிறது. சினிமாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது கடுமையாக உழைக்கிறேன். வாழ்வில் நான் செட்டிலாகும்போது அதுபற்றி எல்லோருக்கும் தெரிவிப்பேன். அதுவரை தயவு செய்து பொறுத்திருங்கள்.

டீன் ஏஜ் வயதில் குழந்தை இருக்கும் ஒருவரை நடிகை சமந்தா திருமணம் செய்து ஏமாந்துவிட்டதாக அதே ஊடகங்கள் மீண்டும் மீண்டும் எழுதி வருவதால் அந்த ஊடகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்து வருகிறாராம் சித்தார்த்.
 
Top