இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு படத்துக்கு பென்சில் என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இன்னொரு படத்துக்கு திரிஷா இல்லன்னா நயன்தாரா என தலைப்பு வைக்கப்பட்டது,. இந்த தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய முனைந்தனர்.

ஆனால் தயாரிப்பாளர் சங்கம் இதை ஏற்கவில்லை. ஒருவர் பெயரை படத்துக்கு தலைப்பாக வைக்க வேண்டுமானால் சம்பந்தப்பட்டவரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் வாங்கி வரவேண்டும் என அறிவுறுத்தினர்.

படக்குழுவினர் நயன்தாராவை அணுகினர். கதையை கேட்டு தன் பெயரை படத்துக்கு வைக்க நயன்தாரா அனுமதி அளித்து விட்டார். அடுத்து திரிஷாவிடம் அனுமதி கேட்டு அணுகியுள்ளார்.
 
Top