இளம் ஹீரோக்களில் சிம்பு முதல் சிவகார்த்திகேயன் வரை அவருடைய மேனரிசங்களை ஃபாலோ பண்ணாதவர்களே இல்லை.

அதிலும் குறிப்பாக சிவகார்த்திகேயன் ஏற்கனவே விஜய் டிவியில் மிமிக்ரி வேலைகளையெல்லாம் செய்து பரிசுகள் எல்லாம் வாங்கியவர் என்பதால் அவருடைய நடிப்பில் அப்படியே ரஜினித்தனம் மேலோங்கி நிற்கும்.

ஆனால் இதுபற்றி சிவகார்த்திகேயனிடம் கேட்டல் அலட்டிக்கொள்ளாமல் பதில் சொல்கிறார்…

நான் ரஜினி சாரோட தீவிரமான ரசிகன். அவர் நடிச்ச ஒரு படத்தைக் கூட நான் மிஸ் பண்ணினதில்லை. அப்படிப்பட்ட என்னோட ஆக்டிங்க்ல ரஜினி சாரோட மேனரிஸம் வர்றதைப் பார்த்து ஆச்சரியப்படத் தேவையில்லை. என்னோட ஆக்டிங்க்ல அவரோட மேனரிஸம் இல்லைன்னாத்தான் ஆச்சர்யப்படணும் என்று சொல்கிறார் சிவகார்த்திகேயன்.

அது மட்டுமா தனது அடுத்த படத்துக்கும் ரஜினி முருகன் என்று டைட்டில் வைக்கச் சொன்ன சிவகார்த்திகேயன் அந்தப்படத்தின் மூலம் அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களையும் தன் பக்கம் இழுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஆளு கணக்குல செம புலி போலிருக்கு…?
 
Top