லண்டனில் இருந்து சான்பிராசிஸ்கோ செல்லும் விமானம் ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண் விமானப்பயணியை அவருக்கு பின்னால் உட்கார்ந்திருந்தவர், பெண்ணின் மார்பை பிடித்ததால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் அனைவரும் சாட்சி கூறியதால் தவறு செய்த விமானப்பயணி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் BA Flight 285 என்ற விமானத்தில் நடந்தது. விமானத்தில் உள்ள 37வது வரிசையில் உட்கார்ந்திருந்த இளம்பெண் ஒருவர் லண்டனில் இருந்து சான்பிராசிஸ்கோவிற்கு சென்று கொண்டிருந்தார். விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் அவர் தூங்கிவிட்டார். அவர் தூங்கிய பிறகு அவருக்கு பின்னால் 36 வது வரிசையில் உட்கார்ந்திருந்த ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணின் மார்புகளை பிடித்துள்ளார். இதை பார்த்த சக பயணி ஒருவர் அந்த இளைஞரை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் தொடர்ந்து தன்னுடைய வேலையில் மும்முரமாக இருந்து வந்துள்ளார்.

சிறிது நேரத்தில் திடுக்கிட்டு விழிந்த அந்த இளம்பெண், தனக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து ஆத்திரத்துடன் அந்த இளைஞரை கண்டபடி திட்டினார். பின்னர் விமான கேப்டனிடம் புகார் கொடுத்தார். விமானம் சான்பிராசிஸ்கோவில் தரையிறங்கியவுடன், அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது சக பயணியை தொந்தரவு செய்ததாகவும், இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
Top