கௌதம் மேனன் இயக்கப்போகும் புதிய படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் என்று ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது வெளிவந்திருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எத்தனை பேரால் ஜீரணிக்க முடியும் என்று தெரியவில்லை.


அஜித்துடன் எமி ஜாக்சன், அனுஷ்கா என்று அஜித் ரசிகர்களை கனவு கோட்டையில் மிதக்கவிட்டு இப்போ எமி இல்லை த்ரிஷா என்று சொன்னால் எப்படி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள்.

ஏற்கனவே த்ரிஷா கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்து படம் சூப்பர் ஹிட் ஆனது, இதை கருத்தில் கொண்டு அஜித்துடன் இரண்டாவது நாயகியாக த்ரிஷாவை நியமித்துவிட்டார்.

மெயிண் நாயகி அனுஷ்கா தான் பயப்பட வேண்டாம்... ஆனால் ஏற்கனவே அஜித்துடன் த்ரிஷா இணைந்து நடித்த மூன்றில் இரண்டு படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்பதால் அதே செண்டிமெண்டை தூக்கி தலையில் வைத்துக் கொண்டுள்ளனர் அஜித் ரசிகர்கள். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்ற கேள்வியும் சுற்றிக் கொண்டிருந்ததால் தற்போது அதற்கும் விடை கிடைத்துள்ளது.

கௌதம் மேனனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தான் அது... அட விடுங்க பாஸ் எமிஜாக்சன் இல்லைன்னா த்ரிஷா.... ஏ.ஆர்.ரஹ்மான் இல்லைன்னா ஹாரிஸ் அவ்ளோதானே....
 
Top