‘என்னை எப்படியாவது உங்க படத்துல போட்டுக்கங்க’ என்று நாயகிகள் கெஞ்சிய காலம் போயே போச்சு.
“நயன்தாராவும் ஹன்சிகாவும் ஓகே சொல்லிவிட்டால் போதும். நாங்கள் ஜென்ம சாபல்யம் அடைந்த மாதிரி,” என்று கூறி அவர்கள் பின்னாலேயே சுற்ற ஆரம்பித்திருக்கிறார்கள் முன்னணி நாயகர்கள் சிலர்!

நிலைமை இப்படியிருக்க, ஹன்சிகா தான் ஒப்புக்கொண்ட ஒரு படத்திலிருந்தே விலகி விடுவேன் என்று திடீர் குளறுபடி செய்ய, படத்தின் நாயகனான ஜெயம் ரவிக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. ஏன் இப்படி?

இருவரும் சேர்ந்து நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ என்ற படத்தை ஒரு பிரபலமில்லாத பட நிறுவனம் தயாரிக்கிறது. இந்த தயாரிப்பாளர் ஏற்கெனவே நயன்தாரா, எஸ்.ஜே.சூர்யா இருவரையும் ஜோடியாக்கி ஒரு படத்தை தயாரித்தவர்தான் என்றாலும், அவருக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை தொடர்ந்து இருக்கிறதாம்.

இந்தப் படத்தில் தனக்கும் ஒரு முக்கியமான பாத்திரம் வேண்டும் என்று அவர் கேட்டதாகவும், ஹன்சிகாவைக் காதலிப்பது போல இருந்தால் இன்னும் நல்லது என்று இயக்குநரை நச்சரிப்பதாகவும் தகவல் போக, அதற்கப்புறம்தான் இந்த முடிவை எடுத்தாராம் ஹன்சிகா. எப்படியோ… ரவி கொடுத்த உத்தரவாதத்தால் ஹன்சிகா தற்காலிக நிம்மதியில் இருப்பதாகக் கேள்வி.
 
Top