அறிமுக இயக்குனர் மணி நாகராஜ், முன்னணி இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷை வைத்து பென்சில் திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

இதில் ஜி வி பிரகாஷிற்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடிக்க சுஜா வருணி, விடிவி கணேஷ், ஊர்வசி ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தற்பொழுது கிடைத்த தகவலின் படி சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் சீரியல் நடிகையுமான உமா ரியாஸின் மகன் ஷாரிக் ஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜி வி க்கு வில்லனாக நடிக்கிறார்.
தனது நடைமுறை வாழ்க்கையிலிருந்து ஷாரிக் மாறுபட்ட கோணத்தில் முதன் முதலில் நடிப்பது அவர் அம்மா உமா ரியாஸிற்கு பெரும் ஆவலை தந்துள்ளது.

மேலும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாம் கட்டமாக பாடல் காட்சி, சண்டை காட்சி போன்றவைகளை தொடங்க உள்ளனர்.

 
Top