ஒரு படத்தின் கதை பிடித்து விட்டால் அதில் நடிக்கும் ஹீரோக்கள் பல விஷயங்களை மெனக்கிட்டு பார்ப்பார்கள். ஆனால் ஜீவாவைப் பொருத்தவரை கூட நடிக்கும் ஜோடி யார் என்பதைத்தான் முதலில் பார்க்கிறாராம். அதற்கு காரணம் கவிழப்போகும் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய என்றென்றும் புன்னகையின் வெற்றி தான்.

இந்தப்படமும் ஓடலேன்னா அண்ணன் ஜித்தன் ரமேஷ் மாதிரி புரொடக்‌ஷன் மேனேஜர் வேலையைத்தான் நாமும் பார்க்கணும் என்ற பயத்தில் இருந்தார் ஜீவா. நல்ல வேளையாக என்றென்றும் புன்னகை வெற்றி அவருக்கு கை கொடுத்து விட்டது.

அந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். அவருடன் சேர்ந்து நடித்த ராசி தான் படம் ஹிட்டாகி விட்டது என்று நம்பும் ஜீவா தனது அடுத்தடுத்த படங்களிலும் கூட த்ரிஷா மாதிரியான மூத்த நடிகைகளையே ஜோடியாக்க சொல்லி டைரக்டர்களை இம்சிக்கிறாராம்.

நயன்தாரா, அனுஷ்கா, காஜல் அகர்வால் போன்ற மூத்த நடிகைகளின் பெயர்கள் உள்ள லிஸ்ட்டை கையில் வைத்துக்கொண்டு தயாராக இருக்கும் ஜீவா டைரக்டர்கள் வந்தவுடன் கதையெல்லாம் அப்புறமா கேட்கிறேன், முதல்ல இவங்கள்ல யாரையாவது கமிட் பண்ணிட்டு வாங்க என்று அடுத்த நிமிஷன் திருப்பி அனுப்பி விடுகிறார்.

அவரின் இந்த ‘காலம் கடந்த’ செண்டிமெண்ட் சமாச்சாரத்தால் சொல்ல வந்த கதையை மறந்து விடுவோமோ என்று பயந்து ஓடும் டைரக்டர்கள் திரும்பி வருவதேயில்லையாம்.
 
Top