நடிகைகள் பலர் தங்களை தொண்டு நிறுவனங்களில் இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகின்றனர். திரிஷா பிராணிகள் நல அமைப்பில் இருக்கிறார். டாப்சி இயற்கையை பாதுகாக்கும் பசுமை இயக்க அமைப்பில் சேர்ந்துள்ளார். தனது வீட்டை சுற்றி மரக் கன்றுகள் நட்டுள்ளார். மற்றவர்களுக்கும் மரக்கன்றுகள் நடும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இது குறித்து நடிகை டாப்சி சொல்கிறார்.

சுற்றுப்புற சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். எல்லோரும் மரக்கன்றுகள் நடவேண்டும். உலகம் வெப்ப மயமாகி வருகிறது. இதனால் இயற்கை அழிந்து விடும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே உலக வெப்பமயமாதலை தடுக்க மரக்கன்றுகளை நடவேண்டும். மரங்களை அழித்தால் எதிர்காலத்தில் ஆக்சிஜனை விலை கொடுத்து தான் வாங்க வேண்டி இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டாப்சி 10 ஏக்கரில் நிலத்தை வாங்கி அதில் மரக் கன்றுகளை நட திட்டமிட்டு உள்ளாராம்.
 
Top