நடிகர் கமலின் மூத்தமகள் ஸ்ருதிஹாசன் தமிழைத் தவிர தெலுங்கு, ஹிந்தியில் கூட படு பிஸியாக இருக்கிறார்.

அவர் யவடு என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக ஆடியதை யாரோ ஒருவர் ஆபாசமான ஆங்கிள்களில் எடுத்து இன்டர்நெட்டுகளில் ரிலீஸ் செய்து விட ப்ளூகலர் ட்ரெஸ்சில் அந்த போட்டோக்களைப் பார்த்த எல்லோருமோ ஒருநொடி ஆடிப்போய் விட்டனர்.

கவர்ச்சி நடிகைகள் கூட இந்தளவுக்கு போட்டோவுக்கு போஸ் கொடுத்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு ஸ்ருதிஹாசனின் அந்த ஸ்டில்கள் ஆபாசத்தின் உச்சமாக இருந்தது.

விஷயம் ஸ்ருதியின் காதுகளுக்குப் போக என்னோட பெர்மிஷன் இல்லாமலேயே போட்டோக்களை ரிலீஸ் செய்து விட்டார்கள் என்று தாம் தூம் என்று குதித்ததோடு தன் சார்பில் போலீசிலும் புகார் கொடுத்திருக்கிறார்.

அவரின் புகாரை ஏற்றுக்கொண்ட ஹைதராபாத் போலீஸ் வழக்கை சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றியிருக்கிறார்கள். அவர்கள் அந்த ஆபாச டாப் ஆங்கிள் போட்டோக்களை எடுத்தவரையும், இன்டர்நெட்டில் ரிலீஸ் செய்தவரையும் தேடி வருகிறார்கள்.

தற்போது விஷாலின் ‘பூஜை’ தமிழ்ப்படத்துக்காக பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் இருக்கும் ஸ்ருதி அங்கிருந்தவாறே தனது வக்கீலுடன் மேற்கொண்டு இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்றும் ஆலோசித்து வருகிறார்.

இதற்கு முன்பும் ஸ்ருதி ஆபாசமாக நடித்திருந்த ‘டி-டே’ என்ற படத்தை தமிழில் டப் செய்து வெளியிட முயன்ற போது என் அனுமதியில்லாமல் ரிலீஸ் செய்கிறார்கள் என்று அப்பட தயாரிப்பாளர் மீது புகார் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதே வேலையாத்தான் திரியிறாரோ ஸ்ருதி?
 
Top