கோடி ரூபாய் கூப்பிட்டுக் கொடுத்தாலும் இனிமேல் ஆர்யாவுடன் நடிக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் நயன்தாரா.


ஆர்யாவைப் பொறுத்தவரை அவர் கூட நடிக்கும் நடிகைகளுடன் இணைத்து கிசுகிசு வரவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும். தன்னை ஒரு ப்ளேபாய் ரேஞ்சிலேயே எல்லா இடத்திலும் காட்டிக்கொள்ளும் அவருடன் எந்த நடிகை சேர்ந்து நடித்தாலும் படம் உடனே ரிலீசாகுதோ இல்லையோ? ஆனால் கிசுகிசு மட்டும் உடனே ரிலீசாகி விடும்.

இந்த லிஸ்ட்டில் நயன்தாராவும் தப்பவில்லை. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்தபோது பற்ற ஆரம்பித்த காதல் விவகாரம் ராஜாராணி படம் ரிலீசான போது இரண்டு பேருக்கும் நிஜத்திலேயே கல்யாணம் ஆகி விட்டது என்கிற அளவுக்கு எல்லை மீறிப்போனது.

ஆனால் வழக்கம் போல இருவருமே நாங்க நல்ல ப்ரெண்ட்ஸ் அவ்ளோ தான் என்று கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

இப்போது ஆர்யா அனுஷ்காவுடன் ஐக்கியமாகி விட, நயனோ தனது பழைய காதலர்களில் ஒருவரான சிம்புவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். சிம்புவின் சொந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் நயன், சிம்புவை மனப்பூர்வமாக மன்னித்து திருமணம் செய்கிற முடிவுக்கு வந்து விட்டதாகச் சொல்கிறார்கள்.

இந்நிலையில் நயன்தாராவுக்கு பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆர்யாவுடன் ஜோடி போடும் வாய்ப்பு வந்தது. ஆனால் சிம்புவின் ஆலோசனைப்படி ஆர்யாவுடன் நடிக்க மறுத்து விட்டாராம் நயன்.

மறுபடியும் சேர்ந்து நடிக்கப் போய் அது மீண்டும் உன்னோட பழைய காதலுக்கு சிக்கலாகி விட்டால் என்னாவது என்று நலம் விரும்பிகளும் அட்வைஸ் பண்ணியதால் முடியவே முடியாது என்று ஒரே போடாக போட்டு விட்டார் நயன்தாரா.

இப்போது அவருக்கு பதிலாக அந்தப்படத்தில் வேறொரு புதுமுகத்தை நடிக்க வைக்கப் போகிறார்களாம்.
 
Top