பாகிஸ்தானில் பொலிசாரை தாக்கி கொல்ல முயன்றதாக கூறி 9 மாத குழந்தையின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் லாகூர் மாகாணத்தில் பொலிசார் மீது, மூசா என்ற 9 மாத ஆண் குழந்தை கொலை முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து நீதிமன்றத்தில் இக்குழந்தையை ஆஜர்படுத்தியபோது நீதிபதி ரபாகத் அலி வரும் 12ம் திகதி வரை ஜாமின் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து மூசாவின் தாத்தா கூறுகையில், பொலிசார் பழிவாங்கும் நோக்கத்துடன் இருப்பதாகவும், இப்பிரச்சினையை தீர்க்க  பாதுக்காப்புக்காக மூசாவை ஊருக்கு அனுப்பி மறைத்து வைக்க போவதாகவும் கூரியுள்ளார்.
 
Top