தனக்கு குழந்தை பிறந்துவிட்டதாக வெளியான தகவலை கேட்டு திக்குமுக்காடிவிட்டார் ப்ரியாமணி.


தமிழ் படங்களின் வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் தற்போது கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார் ப்ரியாமணி.

இந்நிலையில் இவர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், கர்ப்பமாக இருப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவி உள்ளன.

இதற்கு பதில் அளித்துள்ள அவர், என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. மனம் போன போக்கில் எழுதுகிறார்கள். கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது.

இவற்றையெல்லாம் நான் பொருட்படுத்துவது இல்லை என்று கூறியுள்ளார்.

 
Top