மும்பை: நெஞ்சம் படபடத்த ஐ.பி.எல்., லீக் போட்டியின், கடைசி பந்தில் ஆதித்யா தாரே சிக்சர் அடிக்க, மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. ராஜஸ்தான் அணி பரிதாபமாக வெளியேறியது.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த, 7வது ஐ.பி.எல்., தொடருக்கான கடைசி லீக் போட்டியில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
சாம்சன் அபாரம்:
ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் ஷேன் வாட்சன் (8) ஏமாற்றினார். பின் இணைந்த சஞ்சு சாம்சன், கருண் நாயர் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. பிரக்யான் ஓஜா, ஸ்ரேயாஸ் கோபால் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய சாம்சன், அரைசதத்தை பதிவு செய்தார்.
கருண் கலக்கல்:
கோபால் வீசிய 11வது ஓவரில் ஒரு சிக்சர், மூன்று பவுண்டரி உட்பட 18 ரன்கள் எடுத்த கருண் நாயர், அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்த போது, கருண் நாயர் (50) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய சாம்சன் (74) நம்பிக்கை தந்தார்.
கடைசி நேரத்தில் ஜேம்ஸ் பால்க்னர் (23), பிராட் ஹாட்ஜ் (29*) அசத்தினர். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது.
கடின இலக்கு:
பின், 14.3 ஓவரில் 190 ரன்கள் எடுத்தால், ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறலாம் என்ற கடின இலக்கோடு களமிறங்கிய மும்பை அணிக்கு சிம்மன்ஸ் (12) ஏமாற்றினார். மைக்கேல் ஹசி (22) நிலைக்கவில்லை. போலார்டு (7), கேப்டன் ரோகித் சர்மா (16) சொற்ப ரன்னில் அவுட்டானார்கள்.
ஆண்டர்சன் ஆதிக்கம்:
அதிரடியாக ஆடிய கோரி ஆண்டர்சன், ராஜஸ்தான் அணி பந்துவீச்சை விளாசித் தள்ளினார். குல்கர்னி பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஆண்டர்சன், 26 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இவருக்கு அம்பதி ராயுடு ஒத்துழைப்பு கொடுக்க, அணியின் ஸ்கோர் ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்தது.
‘டென்ஷன்’ வெற்றி:
மும்பை அணி 14 ஓவரில் 181 ரன்கள் எடுத்திருந்தது. ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேற, மூன்று பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டன. பால்க்னர் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் ஆண்டர்சன் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தை அம்பதி ராயுடு சிக்சருக்கு அனுப்ப, ‘டென்ஷன்’ எகிறியது. மூன்றாவது பந்தில், இரண்டாவது ரன்னுக்கு ஓடிய ராயுடு (30) ‘ரன்–அவுட்’ ஆனார். மும்பை அணி 14.3 ஓவரில் 189 ரன்கள் எடுக்க ஸ்கோர் சமன் ஆனது. இதனையடுத்து பிளே–ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் இலக்கு தொடர்பாக சந்தேகம் எழ, 3வது அம்பயரிடம் கேட்கப்பட்டது. இதில் 4வது பந்தில் கட்டாயம் பவுண்டரி அடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆதித்யா தாரே, 4வது பந்தை சிக்சருக்கு அனுப்ப, மும்பை அணியின் வெற்றி உறுதியானது.
மும்பை அணி 14.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆண்டர்சன் (95 ரன், 44 பந்து, 6 சிக்சர், 9 பவுண்டரி), ஆதித்யா தாரே (6) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை கோரி ஆண்டர்சன் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம், 14 போட்டியில் 7 வெற்றி, 7 தோல்வி உட்பட 14 புள்ளிகளுடன் ‘ரன்–ரேட்’ அடிப்படையில், ராஜஸ்தானை (+0.060) பின்தள்ளி மும்பை அணி (+0.095) ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது.
என்ன தான் நடக்குது
ஐ.பி.எல்., தொடரின் கடைசி இரண்டு லீக் போட்டிகளில் நம்ப முடியாத அதிசயம் எல்லாம் அரங்கேறியது. நேற்று முன் தினம் கோல்கட்டா அணி, ஐதராபாத்தை வெறும் 14.2 ஓவரில் வீழ்த்தி இரண்டாவது இடம் பிடித்தது. இதன் மூலம் சொந்த மண்ணான கோல்கட்டாவில் ‘பிளே–ஆப்’ போட்டியில் பஞ்சாப்பை சந்திக்கும் வாய்ப்பை பெற்றது.
நேற்று 14.3 ஓவரில் ஸ்கோர் சமன் ஆனது. இதையடுத்து ‘பிளே–ஆப்’ வாய்ப்பை பெற 14.4வது கடைசி பந்தில் பவுண்டரி அடிக்க வேண்டும் என கூறப்பட்டது. பால்க்னரும் சொல்லி வைத்தது போல் ‘புல் டாசாக’ பந்துவீச... அதனை தாரோ சிக்சருக்கு விரட்ட ‘பிளே–ஆப் வாய்ப்பு’ மும்பைக்கு தேடி வந்தது. இதன் மூலம் கோல்கட்டவை போல மும்பை அணியும் தனது சொந்த மண்ணில் ‘பிளே–ஆப்’ போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறது. துவக்கத்தில் 5 போட்டிகளில் வரிசையாக தோற்ற மும்பை அணி அடுத்த சுற்றுக்கு ‘ரன் ரேட்’ அடிப்படையில் முன்னேிறியது உண்மையில் அதிசயம் தான்.
சென்னையுடன் மோதல்
ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான லீக் சுற்று முடிந்த நிலையில், பஞ்சாப் (22 புள்ளி), கோல்கட்டா (16), சென்னை (16), மும்பை (14) அணிகள் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. முதலிரண்டு இடங்களை பிடித்த பஞ்சாப், கோல்கட்டா அணிகள், கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடக்கும், முதலாவது தகுதிச் சுற்றில் மோதுகின்றன. வரும் மே 28ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கும் ‘எலிமினேட்டர்’ போட்டியில், 3, 4வது இடங்களை பிடித்த சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதிச் சுற்றில் தோல்வி கண்ட அணியுடன், வரும் மே 30ம் தேதி மும்பையில் இரண்டாவது தகுதிச் சுற்றில் விளையாடும். பைனல் வரும் ஜூன் 1ம் தேதி பெங்களூருவில் நடக்கும்.