நரேந்திர மோடியும், ஜெயலலிதாவும் இந்தியாவின் மாபெரும் சக்திகளாக இருக்கிறார்கள் என்று நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. வருகிற 21- ஆம் தேதி நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.
அதேபோல தமிழகத்திலும் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்று பலம் வாய்ந்த மாநிலக் கட்சியாக உருவெடுத்துள்ளது.
தேர்தலில் வெற்றிபெற்ற இந்த இரு தலைவர்களுக்கும் இதுவரை எந்த பிரபல நடிகரும் வெளிப்படையாக பாராட்டு தெரிவிக்காத நிலையில் நடிகர் விஜய் முந்திக் கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் இந்திய அலவில் ஒர் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய அளவில் அதிக இடங்களை கைப்பற்றிய திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழகத்தில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ள தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக அளவில் மாபெரும் சக்தியாக திகழும் இந்த இரு தலைவர்களும் உலக அளவில் இந்தியாவை ஒரு வல்லரசு நாடாகவும், இந்திய அளவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும் மாற்றிக்காட்டுவார்கள் என்ற கோடானு கோடி மக்களின் நம்பிக்கையில் நானும் ஒருவனாக இந்த வெற்றியை எண்ணி சந்தோஷமடைகிறேன்.
இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.