சிவகார்த்திகேயன் – ஹன்ஷிகா இணைந்து நடித்துள்ள ‘மான் கராத்தே’ படத்துக்கு வெளிநாடுகளில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பி.மதன் மற்றும் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயாரித்துள்ள படம் தான் ‘மான் கராத்தே’. இந்தப்படம் இன்று தான் உலகம் முழுவதும் ரிலீசாகிறது. ஆனால் துபாய் உள்ளிட்ட சில வெளிநாடுகளில் நேற்றே ரிலீசாகி விட்டது.
அங்கு படத்தைப் பார்த்த ரசிகர்கள் எல்லோரும் ‘மான் கராத்தே’ படத்துக்கு மிகப்பிரம்மாண்டமான வரவேற்பை கொடுத்துள்ளார்கள்.
சிவகார்த்திகேயனைப் பொருத்தவரை இந்த வெற்றி அவர் எதிர்பார்த்த ஒன்றாகத்தான் இருக்கும். அதற்கு காரணம்? விஜய் டிவியில் அவர் ஒரு தொகுப்பாளராக இருந்தபோதே தனக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்று விட்டார். அதனால் தான் எந்த மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் தனது ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று திட்டமிட்டு கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இந்த ‘மான் கராத்தே’ படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்துக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.
அந்தப் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் மீது இருந்த எதிர்பார்ப்பும், மான் கராத்தே படத்துக்கு செய்யப்பட்ட பிரம்மாண்டமான விளம்பரங்களும் இப்படியொரு பிரம்மாண்டமான வரவேற்பைக் கொடுத்துள்ளது.
படத்தைப் பார்த்த ரசிகர்கள் எல்லோருமே “ படத்தின் முதல் பாதி ஃபுல் அண்ட் ஃபுல் காமெடியாகவும், இரண்டாவது பாதி செம மாஸ் ஆகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு தியேட்டரில் முதல்நாள் ஒருகாட்சி மட்டுமே திரையிடப்பட்டது. ஆனால் அந்தக்காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த அமோக ரெஸ்பான்ஸைப் பார்த்து இன்றுமுதல் தினமும் 3 காட்சிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அனிருத்தின் இசையில் ராயபுரம் பீட்டரு… பாடல் உட்பட எல்லாப் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அப்போ, சிவகார்த்திகேயனோட ஹிட்லிஸ்ட்ல ‘மான் கராத்தே’வும் சேர்ந்துடுச்சுன்னு சொல்லுங்க…