நடிகை நஸ்ரியாவுக்கும் மலையாள நடிகர் பகத் பாசிலுக்கும் கடந்த ஜனவரி 21ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.


இருவருக்கும் வருகிற ஆகஸ்ட் 21ந் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. இது காதல் திருமணம் அல்ல. பெற்றவர்கள் பார்த்து முடிவு பண்ணிய திருமணம். திருமணத்துக்கு பிறகும் நஸ்ரியா நடிக்க விரும்பினாலும் பகத் குடும்பத்தாருக்கு நஸ்ரியா தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் சம்மதமில்லை. கையில் இருக்கும் படங்களை முடித்து கொடுத்து விட்டு சினிமாவை விட்டு விலகிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். பகத்தும் அதையே விரும்புவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் நடிக்க ஒப்புக் கொண்ட படங்களில் இருந்து விலகத் தொடங்கியிருக்கிறார் நஸ்ரியா. மலையாளத்தில் ஹே ஐஎம் டோனி என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இப்போது அந்த படத்திலிருந்து விலகி விட்டதோடு வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் திருப்பிக் கொடுத்து விட்டார். அதோடு தமிழில் பார்த்திபன் இயக்கும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் இலங்கை தமிழ் பெண்ணாக நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார்.

இப்போது அதிலிருந்தும் விலகி விட்டார். தற்போது வாய் மூடிபேசுவோம், திருமணம் என்னும் நிக்காஹ் படங்களிலும், மலையாளத்தில் பெங்களூர் டேய்ஸ், சம்சாரம் ஆரோக்கியத்துன ஹானிகாரம் என்ற படங்களிலும் நடித்து வருகிறார். வேறு எந்த புதுபடங்களையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. “எனக்கு சினிமாவை விட குடும்பம்தான் முக்கியம்” என்று அடிக்கடி கூறிவரும் நஸ்ரியா திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டார் என்பது உறுதியாக தெரிகிறது

 
Top