பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியுடன் வாழ முடியாமல் போனதற்கு எனது கேட்ட நேரமும், தனது விதியுமே காரணம் என்று கூறுகிறார் மோடியின் மனைவி யசோதா பென்.


தனது திருமணம் குறித்து இதுவரை வெளிப்படையாக தெரிவிக்காத நரேந்திர மோடி, இந்த முறை, வதோதரா தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனக்கு திருமணமாகிவிட்டது என்றும், தனது மனைவியின் பெயர் யசோதா பென் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, யசோதா பென்னை சந்தித்து ஊடகங்கள், மோடியுடனான வாழ்க்கையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்துவிட்டன.

யசோதா பென் சிமன்லால் மோடி ஒரு ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்.  அவருக்கு 17வது வயதில் மோடியுடன் திருமணம் நடந்துள்ளது. கடந்த 3 வருடங்களாக அவர் தனியாக வசித்து வருகிறார்.

தற்போது, அதிக நேரத்தை கடவுளை பூஜிப்பதற்காக செலவிடும் யசோதா பென், மோடிக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் அமைய விரும்புகிறேன். அதற்காக, தனது இஷ்ட தெய்வமான துர்கையை தினமும் வழிபடுகிறேன். எனது விதி மற்றும் கெட்ட நேரம்  தான் மோடியுடன் வாழ முடியவில்லை என கூறினார்.
 
Top