சிம்புவின் சொந்தப்படத்தில் நயன்தாரா நடிக்க வந்ததையடுத்து சிம்பு-ஹன்ஷிகா காதல் ஒரு முடிவுக்கு வந்தது.
இருவருமே பரஸ்பரம் பிரிந்து விட்டதாக பல வாரங்களுக்கு முன்பு அறிவித்தனர்.
இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்தே இந்த காதல் விவகாரம் பிடிக்காமல் இருந்த ஹன்ஷிகாவின் அம்மாவுக்கு தனது மகளின் காதலை எப்படி முறிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார். ஆனால் எங்கே தான் மகளுக்கு நெருக்கடி கொடுக்க, அதுவே காதலை தீவிரப்படுத்தி விடுமோ என்று பயந்து மகள் போன போக்கிலேயே அவரை விட்டுப் பிடித்தார்.
அவர் எதிர்பார்த்தது போலவே திடீரென்று ஒருநாள் ”நான் இப்போது சிங்கிளாகத்தான் இருக்கிறேன்” என்று சிம்புடன் காதல் முறிவு பற்றி ட்விட்டரில் விளக்கமளித்தார் ஹன்ஷிகா.
இதனால் உற்சாகமடைந்த ஹன்ஷிகாவின் அம்மா அந்தக் காதல் முறிவைக் கொண்டாடும் விதமாக சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார்.
அதுபோக தனக்கு நெருக்கமான ஒருசில பத்திரிகை நிருபர்களுக்கும் போனைப் போட்டு எம்பொண்ணு இப்போ ஃப்ரீயாத்தான் இருக்கு. நீங்கள் எப்பொ வேணாலும் வந்து இன்டர்வியூவ் எடுத்துக்கலாம் என்றாராம்.
காதல் முறிவுக்கு பிறகு மகளுக்கு எக்கச்சக்க பட வாய்ப்புகள் தேடி வருவதால் ஹன்ஷிகாவின் அம்மா செம குஷியில் இருக்கிறாராம்.