‘மான் கராத்தே’ ஆடியோ பங்ஷனில் பவுன்சர்ஸ் சர்ச்சையில் சிக்கிய பிறகு சிவகார்த்திகேயனிடம் நல்ல மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. ஆனால் அந்த மாற்றத்துக்குக் காரணம் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் என்ற உண்மையையும் சொன்னார் சிவகார்த்திகேயன்.

முன்னதாக ‘மான் கரத்தே’ சக்சஸ் மீட்டில் பேசிய டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘மான் கராத்தே’ சக்சஸ் ஆன சந்தோஷத்துல உங்களை சந்திக்கிறேன். ஒரு பெரிய வெற்றிக்குப் பின்னால சொந்த வீட்டுக்கு போகப்போறப்போ ஒரு சந்தோஷம் இருக்குமே அப்படி ஒரு சந்தோஷம் தான் எனக்குள்ள இருக்கு.

பொதுவா ஒரு படம்னா எப்படி ஒரு ஆக்‌ஷன் படம் எடுக்க கஷ்டப்படுறோமோ..? அதேமாதிரி தான் காமெடிப்படத்தையும் கஷ்டப்பட்டு எடுக்கிறோம். காமெடிப்படம்கிறதுனால ஸ்பாட்ல அரட்டை அடிச்சிட்டு, ஜாலியா பேசிட்டு ஷூட்டிங்கை முடிச்சிடுவோம்னு நெனைக்க வேணாம். காமெடிப்படத்துல டைமிங் ரொம்ப முக்கியம். அந்த டைமிங்கோட எடுத்தா தான் காமெடி நல்லா வரும். இல்லேன்னா ரொம்ப கஷ்டம்.

இந்தப் படத்தை பொறுத்தவரை தியேட்டர்ல போய் பார்க்கும் போது எல்லா வயசு ரசிகர்களும் இந்தப் படத்தை கூட்டம் கூட்டமா பார்க்க வர்றாங்க. அதைப் பார்க்கும் போது மனநிலை ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. சிவகார்த்திகேயன் மாதிரியான ஹீரோவை வெச்சு ரொம்ப சீரியஸான படம் பண்ண முடியாது. அது எதிர் விளைவுகளைத் தான் தரும். இதுக்கு முன்னாடி ரிலீசான படங்கள்ல இருந்து அடுத்த லெவலுக்கு அவரை கூட்டிட்டுப் போகணும்.

எடுத்த எடுப்பிலேயே கருத்து சொல்ற படத்துல சிவகார்த்திகேயன் ஹீரோவா நடிக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாத்தான் போகணும். அவரோட ரசிகர்கள் அவரை எப்படி பார்க்க ஆசைப்படுறாங்கன்னு ஒரு கோணம் இருக்கு. அதிலிருந்து தான் கொஞ்சம் கொஞ்சமா அவர் மேல போக முடியும்.

பணம் சம்பாதிக்கிறது எனக்கு முக்கியமில்லை. நல்ல திறமைசாலிகளை அறிமுகப்படுத்தணும். அதுக்காகத்தான் நான் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சேன்.  என்றார்.

பின்னர் பேச வந்த சிவகார்த்திகேயன் எங்க என்ன சப்போர்ட், யாரு கை கொடுப்பா அப்படின்னு யோசிச்சிக்கிட்டிருக்கும் போது, நீ நெனைக்கிற மாதிரி இல்ல, இங்க இவ்வளவு பேர் உன்னை அடையாளம் காட்டுறதுக்கு இருக்காங்கன்னு சொல்லி பத்திரிகையாளர்களை அடையாளம் காட்டினது முருகதாஸ் சார் தான்.

அவரோட ஒவ்வொரு பேச்சிலேயும் அதை என்னால உண்ர முடிஞ்சது. அந்த வகையில் பத்திரிகையாளர்களான நீங்கள் சொல்றது தான் மக்கள் மத்தியில போய்ச் சேருகிறது. இன்னைக்கு மான் கராத்தே சக்சஸையும் தாண்டி ஆடியோ பங்ஷன்ல பவுன்சர்ஸ் விஷயத்துல நடந்தது என்னோட தப்பு இல்லேங்கிற உண்மையை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்ததுக்கு நன்றி சொல்லிக்கிறேன் என்றார். அதுக்கு முருகதாஸ் சாருக்கும் நான் நன்றி சொல்லிக்கிறேன் என்றார்.

தயாரிப்பாளரும் ஸாரி கேட்டுட்டார், நீங்களும் திருந்திட்டீங்க… அப்புறம் என்ன மேட்டரை விடுங்க…ஜி
 
Top