2009–ல் ‘லக்’ இந்தி படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். 7–ஆம் அறிவு படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தார். ‘3’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார்.
தற்போது ‘பூஜை’ படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகை பட்டியலுக்கு வந்துள்ளார்.

அங்கு சித்தார்த், பவன் கல்யாண் ரவிதேஜா, ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் தேஜா, அல்லு அர்ஜுன் போன்ற பெரிய ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தற்போது இந்தியில் அக்ஷய்குமாருடன் கப்பார் படத்திலும் ஜான் அபிரகாமிடன் வெல்கம் பேக் படத்திலும் நடிக்கிறார். மேலும் ஒரு இந்திப் படத்துக்கும் ஒப்பந்தமாகியுள்ளார். மூன்று மொழி படங்களிலும் பிசியாக கலக்கி வருகிறார்.

அத்துடன் கவர்ச்சிக்கும் மாறியுள்ளார். இந்தியில் வெளியான ‘டிடே’ படத்தில் விலைமாதுவாக படுக்கையறை காட்சிகளில் நெருக்கம் காட்டி இருந்தார். தெலுங்கு படங்களிலும் அரைகுறை ஆடையில் கவர்ச்சி நடனங்கள் அடி உள்ளார். நயன்தாரா, திரிஷா, அனுஷ்காவுக்கு இணையாக உயர்கிறார்.
 
Top