முகநூல்  காதலால் ஒரு மில்லியன் பெறுமதியான நகைகளை பறிகொடுத்த குடும்பமொன்று பற்றிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.


இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்நகரைச் சேர்ந்த யுவதி ஒருவரை முகநூல் அறிமுகத்தில் யாழ்ப்பாணம் தாவடி பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவர் காதலித்துள்ளார். காதலின் உச்சமாக திருமணம் செய்யப் போவதாக யுவதி கூறியுள்ளார். அதன் அடிப்படையில் கடந்த 15ம் திகதி தனது வீட்டிலிருந்து வெளியேறி வந்து விட்டதாக கூறி இளைஞரின் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.

அங்கு சுமார் நான்கு நாட்கள் தங்கியிருந்தவர் ஜந்தாம் நாளன்று காதலனின் வீட்டார் அனைவருக்கும் மயக்க மருந்தினைத் தெளித்து விட்டு காதலனின் தாயார் சகோதரர்கள் என அனைவரதும், சுமார் ஒரு மில்லியன் பெறுமதியான நகைகளை களவாடிக்கொண்டு தப்பித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 
Top