கேப்டன் விஜயகாந்த் என்று பெயர் வர காரணமாக இருந்த விஜயகாந்த்தின் கேப்டன் பிரபாகரன் படத்தை இளைய தளபதி விஜய் ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மௌன ராகம் படத்தின் சாயலை வைத்து வெளிவந்த ராஜா ராணி படத்தை இயக்கிய அட்லி இந்த படத்தை ரீமேக் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அட்லி சமீபத்தில் கதையை பற்றி கூறியதாகவும், உடனே இளைய தளபதியும் கேப்டனின் ரோலில் நடிக்க ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.

கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக சத்திய மங்கலம் காட்டில் வீரபத்திரன் (மன்சூர் அலிகான்) என்ற தீவிரவாதியை கைது செய்கிறார்.

ஆனால் ஊழல் செய்யும் ஒரு போலீஸ் அதிகாரி வீரபத்திரனை நடுரோட்டில் சுட்டுக் கொள்கிறார்.

இதன் பிறகு என்ன நடக்கிறது என சுவாரஸ்யமான கதைகளத்துடனும் அமைந்திருக்கிறது இப்படம்.

குறிப்பாக கேப்டன் பிரபாகரன் படம் விஜயகாந்த்க்கு 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இப்படத்தை பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவராத நிலையில், இந்த கதையில் இளையதளபதி விஜய் நடித்தால் அவரது சினிமா வாழ்க்கையில் இந்த படம் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்ற சொல்லலாம்.

 
Top