தீயா வேலை செய்யணும் குமார் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து சுந்தர் சி இயக்கும் திரைப்படம் அரண்மனை.
இந்த படத்தில் சுந்தர் சி, வினய் ராய், லக்ஷ்மிராய் மற்றும் ஆண்ட்ரியா நடிக்கிறார். சென்ற படத்தில் நடித்த நாயகி ஹன்சிகாவையே இந்த படத்திலும் நாயகியாக நடிக்க வைத்துள்ளார் சுந்தர் சி.
அரண்மனை படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா தேதியை முடிவு செய்ய உள்ளனர். ஆடியோ வெளியீட்டு விழாவை முதல்முறையாக ஜப்பானில் வைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜப்பானில் நடந்தபோது, ஹன்சிகாவுக்கு இருந்த வரவேற்பை பார்த்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவின் அழகை கேள்விப்பட்ட ஜப்பான் அமைச்சர் ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு அவரை விருந்து சாப்பிட அழைத்து சென்ற செய்தி ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகி இருந்தது.
மேலும் சுந்தர் சி, இந்த படத்தை முடித்தவுடன், அடுத்த படத்தில் அவரே ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ளாராம். அந்த படத்திலும் நாயகியாக நடிக்க ஹன்சிகாவை அணுகியுள்ளார் சுந்தர் சி. ஆனால் சுந்தர் சி உடன் ஜோடியாக நடிக்க ஹன்சிகா தயங்குவதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தின் கேரக்டர் குறித்து குஷ்பு ஹன்சிகாவிடம் விளக்கி கூறியதோடு, பெரும்தொகையை சம்பளமாக தருவதாக கூறியுள்ளதால் ஹன்சிகா ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.