இந்த 2014ஆம் வருஷத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. அது என்னவென்றால் தமிழின் முன்னணி காமெடியன்களான கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் இவர்கள் ஹீரோவாக நடித்த படங்கள் ரிலீசாக உள்ளது.


அந்த வகையில் பல வருடங்களுக்குப் பிறகு கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் ’49 ஓ’ படமும் இந்த வருஷமே ரிலீசாக உள்ளது.

நேற்று நடைபெற்ற தெனாலிராமன் ஆடியோ பங்ஷனில் பெருங்கூட்டம் வந்ததால், ஆடியோ பங்ஷன் முடிந்த பிறகு ஒருசில பத்திரிகையாளர்களை மட்டும் தனியாகக் கூப்பிட்டு ஜாலியாகப் பேசினார் ‘வைகைப்புயல்’ வடிவேலு.

அப்போது அவரிடம் “ இந்தக்கேள்வி தவிர்க்க முடியாத கேள்வி எலெக்‌ஷனெல்லாம் நடக்குது. உங்களோட அரசியல் மூவ்மெண்ட்டைப் பத்திச் சொல்லுங்கண்ணே…” என்றார் ஒரு நிருபர்.

அதற்கு பதிலளித்த வடிவேலு ‘பாலிடிக்ஸ் எல்லாம் நமக்கு வேணேம்னே, இனிமே படங்கள்ல மட்டும் தான் நடிக்கப் போறேன். நீங்களே அங்கிட்டு போகத, நடிங்கன்னு சொல்லணும்னே… நீங்க சொல்லாம வேற யாரு சொல்லுவா..? மறுபடியும் என்னை இழுத்து விட்டுறாதீங்க…’ என்றார்.

‘இப்போ வர்ற எந்தப் படத்தையும் நான் பார்க்கிறதில்ல, நல்ல காமெடியா இருந்தா சிரிச்சுருவேன். இல்லேன்னா பார்க்க மாட்டேன். அதுக்கு நாம யாரையும் குத்தம் சொல்ல முடியாது. அதெல்லாம் உடம்போட வரணும்னே. என்றவரிடம் கவுண்டமணியும் ஒரு படத்துல ஹீரோவா நடிக்கிறாரு… என்று ஒருவர் சொல்ல, அதைக்கேட்ட வடிவேலு “அப்படியாண்ணே கவுண்டமணி அண்ணே நடிக்கிறாரா… வரட்டும்ணே… அண்ணன் வரனும்னே, வந்தா நல்லது தானே..? அவரு நல்ல தொழிலாளி. மக்கள் ரசிச்சா நல்லது தானே? யாரு ஒருத்தன் அவன் வந்துட்டான், இவன் வந்துட்டான்னு நெனைச்சு பயப்படுறானோ அவன் தோத்துப்போவாம்னே. ஆனா என்னோட காமெடி மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்குண்ணே’ என்றார் வடிவேலு.
 
Top