பொதுவாக சின்னத்திரையிலிருந்து பெரியதிரைக்கு வருபவர்கள் சினிமாவில் ஜெயிப்பதற்காக பல போராட்டங்களை சந்திப்பார்கள். அப்படி வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் துக்கடா கேரக்டர்களில் நடித்து ரெண்டு, மூன்று படங்களோடு காணாமல் போய் விடுவார்கள்.
ஆனால் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் நுழைவதற்கே பல போராட்டங்களை சந்தித்தவர் என்பதால் அது கொடுத்த பாப்புலாரிட்டி ஈஸியாக பெரியதிரைக்கு அவரை கூட்டி வந்து விட்டது. அதோடு அவர் நடித்த எல்லாப் படங்களுமே அடுத்தடுத்து ஹிட்டாகி வருகின்றன.
அதன் விளைவு கோலிவுட்டின் இப்போதைய மோஸ்ட் வாண்டட் ஹீரோ யார் என்று கேட்டால் அது சிவகார்த்திகேயன் என்று தான் எல்லோரும் கோரஸாக சொல்கிறார்கள். தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்த படம் தயாரிக்க சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டுக்காக தவம் கிடக்கிற சூழ்நிலையில் இப்போது விளம்பரத் துரையிலும் சிவகார்த்திகேயனுக்கு ஜாக்பாட் அடிக்க ஆரம்பித்துள்ளது.
பெரிய திரையில் பிரபலமானவர்களை உடனே விளம்பர ஏரியாவுக்கு இழுத்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயனை ஒரு பிரபல ஜவுளிக்கடை நிறுவனம் தனது கடையின் விளம்பரப்படத்தில் நடிக்க கேட்டுக் கொண்டது. விளம்பரம் என்றவுடன் முதலில் மறுத்த சிவகார்த்திகேயன் பின்னர் அவர்கள் கொடுப்பதாகச் சொன்ன சம்பளத்தை கேட்டு உடனே ஓ.கே செம டீல்’ என்றாராம்.
அப்படி என்ன சம்பளம் பேசினார்கள்? அதிகமில்லை 3 நாள் கால்ஷீட்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம்.
அட்ராசக்க…!