எந்த வேலையும் முடியாமலேயே கோச்சடையான் படம் ஏப்ரல் 11- ஆம் தேதி ரிலீசாகி விடும் என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னார் செளந்தர்யா ரஜினிகாந்த். ஏப்ரல் 11 – ஆம் தேதிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கோச்சடையான் படம் ரிலீசுக்கான எந்த அறிகுறியையும் காண முடியவில்லை.


கடந்த மார்ச் மாசம் 19 ஆம் தேதி அந்தப்படத்துக்கு யு சர்ட்டிஃபிகேட் வாங்கிய செளந்தர்யா படத்தின் இறுதிக்கட்ட வேலைகளைப் பார்க்க உற்சாகமாக சீனாவுக்குக் கிளம்பிப் போய் விட்டார்.
அவர் சீனா சென்ற பிறகு கோச்சடையான் படத்தின் லேட்டஸ்ட் நிலவரம் தினமும் ஒரு புதுப்புது செய்தியாக வருகிறது. படத்துக்கு இன்னும் பின்னணி இசை வேலையே முடியவில்லை. அதற்குள் எப்படி சென்சார் சர்ட்டிஃபிகேட் வாங்கினார்கள் என்ற சர்ச்சையும் இப்போது கிளம்பியிருக்கிறது.

சென்சார் பண்ணிய புறகு ஒரு படத்தில் எந்த திருத்தமும் செய்யக்கூடாது அதையும் மீறி சீனாவில் கோச்சடையானை மெறுகேற்றி வருவதாக செளந்தர்யா மீது புகார் வந்திருப்பதால் இன்னும் ஒருமுறை எங்களுக்கு படத்தை போட்டுக்காட்ட வேண்டும் என்று சென்சார் போர்டு நெருக்கடி கொடுத்திருக்கிறதாம்.

ஆக செளந்தர்யா சீனாவிலிருந்து வந்தபிறகு மீண்டும் படத்தை சென்சாருக்கு அனுப்பி… அதற்குப் பிறகு ரிலீஸ் தேதியை அறிவித்து… அட போங்க பாஸ் கோச்சடையான் ரிலீஸை இப்போதைக்கு மறந்துடுங்க.
 
Top