ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் ரிலீசுக்கு தயாராகிறது. வருகிற 11–ந் தேதி இப்படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் பாராளுமன்ற தேர்தலாலும், பிற படங்களுக்கு வழிவிடும் நோக்கோடும் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

மே 1ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், குஜராத்தி, பஞ்சாபி, ஒரியா ஆகிய மொழிகளில் இப்படம் வருகிறது. ஐப்பானிய மொழியிலும் டப்பிங் செய்து வெளியீடுகின்றனர்.உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் 3 ஆயிரத்து 850 தியேட்டர்களில் இப்படத்தை திரையிடுகின்றனர். ‘கோச்சடையான்’ படம் ‘அவதார்’, ‘டின்டின்’ போன்ற ஹாலிவுட் படங்கள் சாயலில் அனிமேஷன் படமாகி தயாராகியுள்ளது. ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

தீபிகா படுகோனே நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சரத்குமார், ஷோபனா, ஆதி, ஜாக்கி ஷெராப் போன்றோரும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர்.‘கோச்சடையான்’ படத்தை சரித்திர கதையம்சத்தில் எடுத்துள்ளனர். தந்தை ரஜினி ஆளும் நாட்டை வில்லன்கள் நயவஞ்சகமாக பறித்துக் கொள்வதும் அவர்களிடம் இருந்து மகன் ரஜினி நாட்டை எவ்வாறு மீட்கிறார் என்பதுமே கதை.தமிழகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் ‘கோச்சடையான்’ திரையிடப்பட உள்ளதால் இப்படம் வரும்போது வெளியாக இருந்த பல படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளன.
 
Top