இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி பேட்ஸ்மேன் வீராட் கோலி  பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காலித்து வருகின்றார். சமீபத்தில் நியூசிலாந்தில் இந்திய அணி விளையாடிய போது காதலன் வீராட் கோலியை பார்பதற்காக அனுஷ்கா சர்மா நியூசிலாந்து சென்றார். அங்கு இருவரும் ஒன்றாக சுற்றினர்.


இந்நிலையில் இலங்கை கடற்கரையில்  கோலியும், அனுஷ்கா சர்மாவும் ஜாலியாய சுற்றியது வெளியாகியுள்ளது. சமீபத்தில் படப்பிடிப்பிற்காக அனுஷ்கா சர்மா இலங்கை சென்றிருந்தார்  ஆசிய கோப்பை முடிந்த பின் நாடு திரும்பிய வீராட்கோலியும் இலங்கை சென்று காதலியை பார்த்திருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் இருவரும் ஜாலியாக சுற்றியதாகவும், நேற்று முன்தினம் வீராட் கோலி நாடு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியினருடன் வங்கதேசம் சென்றுள்ளார்.
 
Top