சந்தோஷ் சிவன் டைரக்ட் செய்துள்ள ‘இனம்’ படத்துக்கு தமிழ் இன உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்தப்படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், டைரக்ட் செய்திருக்கும் இனம் படத்தை டைரக்டர் என்.லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. சரிதா, கருணாஸ் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படத்தின் ப்ரீமியர் ஷோ சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களுக்காக திரையிடப்பட்ட அந்த ஷோவில் இயக்குநர் வ.கவுதமன் உள்ளிட்ட தமிழ்இன உணர்வாளர்கள் சிலரும் படத்தைப் பார்த்திருக்கின்றனர்.
படத்தை பார்த்த அவர்கள் ‘இனம்’ படம் முழுக்க முழுக்க தமிழ் மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்டிருப்பதாக புகார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் கொளத்தூர் மணி, சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு புகார் அளித்துள்ளார். அதில் ‘இனம்’ படம் தமிழர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் அப்படத்தை வெளியிடக்கூடாது என்றும், இப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றும், படத்தை மீறி திரையிட்டால் தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று தனது புகாரில் கூறியிருக்கிறார்.
இதனிடையே இப்பிரச்னை தொடர்பாக இயக்குநர் சங்கத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது இந்தப்படத்தில் இலங்கை தமிழர்களுக்கு எதிரான காட்சிகள் எதுவும் கிடையாது என்று லிங்குசாமிக்கு ஆதரவாக இயக்குநர்கள் சங்கம் களமிறங்கியிருக்கிறது. இன்னும் சிலரோ “ இது போன்ற படத்தை தனது பேனரில் ரிலீஸ் செய்வதையே அவர் தவிர்த்திருக்கலாம், தமிழரான லிங்குசாமிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? என்றும் ‘உச்’ கொட்டுகிறார்கள்.