வருகிற ஆகஸ்ட் மாதம் 24- ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் நஸ்ரியா தொடர்ந்து சினிமாவில் நடிக்க திடீர் தடை போட்டிருக்கிறார்கள் பகத் பாசில் குடும்பத்தினர். இதனால் அவர் கடும் அதிர்ச்சியில் உள்ளார்.
தமிழில் ‘நேரம்’, ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’ ஆகிய படங்களில் நடித்தவர் நஸ்ரியா. நய்யாண்டி படத்தில் டைரக்டருடன் ஏற்பட்ட தொப்புள் சர்ச்சை காரணமாக மீண்டும் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கு பகத் பாசிலுடன் ஒரு படத்தில் நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டது. இரண்டு பேரின் வீட்டிலும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து நிலையில் அவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.
நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் ‘ஹை ஐ ஆம் டோனி’ என்ற படத்தில் நடிக்க ஓ.கே சொன்னார் நஸ்ரியா. மலையாள நடிகர் லால் தயாரிக்கும் இந்த படத்தில் அவரது மகன் ஜூனியர் லால் ஹீரோவாக நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ள நிலையில் திடீரென்று ‘நஸ்ரியா சினிமாவில் நடிக்கக் கூடாது’ என்று பகத் பாசில் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் தற்போது அந்த படத்திலிருந்து நஸ்ரியா விலகி விட்டார். அவருக்கு பதில் மியா என்ற நடிகையை கமிட் செய்துள்ளார்கள். பஹத் பாசிலும், அவரது குடும்பத்தினரும் சினிமாவில் நடிக்கக் கூடாது என்று தடை போட்டதால் தான் அந்தப் படத்தில் இருந்து நஸ்ரியா விலகினாராம்.
முன்னதாக சமீபத்தில் சென்னையில் நடந்த ‘வாய் மூடி பேசவும்’ படத்தின் ஆடியோ பங்ஷனில் திருமணத்துக்குப் பிறகும் கூட நான் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் அதைப்பற்றி பகத் பாசிலுடன் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்திருந்தார் நஸ்ரியா.
ஆனால் பகத்பாசிலோ நஸ்ரியா உடனான காதல் செய்தி மீடியாக்களில் வந்த அடுத்த நாளே “என்னை திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண் ஒரு அடிமை போல என்னிடம் இருக்க வேண்டியிருக்கும், நான் கொடுக்கும் டார்ச்சர்களை அவர் சகித்துக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு பெண்ணாக நான் நஸ்ரியாவைப் பார்க்கிறேன்” என்று கூறியிருந்தார்.
அப்படியானால் இதுதான் டார்ச்சர் லிஸ்ட்டில் முதலாவதோ…?