ஹீரோவாக நடித்த முதல் படத்திலேயே அந்தப்படத்தில் ஜோடியாக நடித்த ஹீரோயினை கல்யாணம் வரைக்கும் கரெக்ட் செய்த சந்தோஷத்தில் இருக்கிறார் ஒரு இளம் ஹீரோ. அவர் வேறு யாருமல்ல. ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படத்தின் ஹீரோ அபி தான்.


தேனிக்காரரான அபி ஹீரோவானதே ஒரு தனிக்கதை.

பூ, களவாணி ஆகிய படங்களின் இசையமைப்பாளர் தான் எஸ்.எஸ்.குமரன். இவர் ‘தேனீர் விடுதி’ என்ற படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானார். ஆனால் எதிர்பார்த்த அளவு அந்தப்படம் ஓடவில்லை. இருந்தாலும் அவருக்குள் இருந்த இயக்குனர் ஆசை மட்டும் தீரவில்லை. மீண்டும் படம் டைரக்ட் செய்யும் ஆசையில் இருந்த அவர் பல மாதங்களுக்கு முன்பு ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ என்ற படத்தை ஆரம்பித்தார்.

இந்தப் படத்துக்கு புதுமுக ஹீரோவை தேடி வந்த அவர் தனது நண்பர்கள் மூலமாக அபியை சந்தித்தார். பார்க்க ஒரு ஹீரோவுக்காக லுக் இருந்ததால் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் உடனே அவருக்கு சான்ஸ் கொடுத்து விட்டார். அது போதுமே? கலாக்காய்க்கு ஆசைப்பட்டு வந்தவனுக்கு பலாச்சுழையே கிடைத்த சந்தோஷத்தில் திளைத்தார் அபி.

‘கேரளம் நாட்டிளம் பெண்களுடனே’ படத்தில் காயத்ரி என்ற கேரள நடிகை தான் அபியின் ஜோடி. 17 வயதே ஆன காயத்ரிக்கு இதுதான் முதல்படம். படத்தில் ஒரு முத்தக்காட்சி உண்டு. அந்த முத்தக் காட்சியில் கொஞ்சம் ‘ஓவராகவே’ ஒன்றிப்போய் விட்டாராம் அபி. அதை நினைத்து அப்செட் ஆன காயத்ரி, அதற்கடுத்த சில நாட்கள் அபியை முறைத்துக் கொண்டாராம். ஆனால்  நாட்கள் செல்லச் செல்ல ‘கட்டிப் புரண்டு’ மாதிரியான நெருக்கமான காட்சிகள் அவர்கள் இருவருக்குமான நெருக்கத்தை அதிகரித்து விட்டது.

ஆரம்பித்த புதிதில் படப்பிடிப்பில் சமத்துப் பிள்ளையாக இருந்த அபி நாட்கள் செல்லச் செல்ல அடிக்கடி படப்பிடிப்பிலிருந்து காணாமல் போனார். அவர் எப்போதெல்லாம் காணாமல் போகிறாரோ? அப்போதெல்லாம் அந்தப் படத்தில் அவருடன் சேர்ந்து நடித்த ஹீரோயின் காயத்ரியும் காணாமல் போனார். சந்தேகப்பட்ட டைரக்டர் எஸ்.எஸ்.குமரன் படப்பிடிப்பு நடந்த பகுதிகளில் தனது உதவியாளர்களை வைத்து தேடுதல் வேட்டை நடத்திய போது மறைவான இடங்களில் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார் அபி. இதனால் டென்ஷனான எஸ்.எஸ்.குமரன் அபியைக் கூப்பிட்டு எச்சரித்ததோடு, படத்தின் விளம்பரங்களிலும் கூட அவரது போட்டோக்களை இருட்டடிப்பு செய்திருக்கிறார்.

அவரின் இந்த காதல் களியாட்டங்களை வன்மையாக கண்டித்திருக்கிறார் குமரன். எங்கே இவரால் தனது காதல் தோல்வியடைந்து விடுமோ? என்று பயந்த அபி உடனடியாக இந்த விஷயத்தை இரண்டு பேரின் வீட்டிலும் சொல்லி சம்மதம் வாங்கி விட்டார்.

காதல் ஜோடிகளுக்குள் ‘கெமிஸ்ட்ரி’ சக்சஸ் ஆகி விட்டாலும் இப்படி ஒரு ‘அசிங்கம்’ தனது படத்தில் நடந்து விட்டதே என்று டைரக்டர் குமரன் மட்டும்  இருவரின் மீதும் செமக் கடுப்பில் இருக்கிறாராம்.
 
Top