கானாவிற்கு பெயர் போனவர் கானா பாலா தற்போது அவரது திறமையை நடிப்பிலும் வெளிபடத்துவாரோ என்ற கேள்வி எழும்பியுள்ளது.
ஆடிபோனா ஆவணி என்ற பாடலை பாடி சினிமா திரையுலகில் மட்டுமல்லாமல் எல்லோர் மனதிலும் அறிமுகமானவர் கானா பாலா.


சாதாரணமாக இசை வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளில் என்னை வைத்து படம் எடுங்கள் என தமாஷாக பேசி வந்தவர்.

தற்போது நிஜமாகவே ஹீரோவாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
.
நின்னத்தேன் வந்தாய், பிரியமானவளே போன்ற படங்களை இயக்கிய செல்வபாரதி தற்போது பாரீஸ் கார்னர் என்ற படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் கானாபாலா, சென்னையின் வருமையை மையமாக கொண்டு எடுக்கவுள்ள இப்படத்தில் ரிக்ஷா ஒட்டுபவராக நடிக்க போறாராம் கானா பாலா.

கானா உலகத்தை கலக்கிய கானா பாலா தற்போது கதாநாயகனாக வலம் வர இருக்கிறார்.

 
Top