ஒரு படம் ஹிட்டாகி விட்டால் உடனே போனைக் கூட அட்டன் பண்ண முடியாத அளவுக்கு பாவ்லா காட்டும் மோசமான போக்கு தமிழ்சினிமாவின் இளம் ஹீரோக்கள் மத்தியில் ரொம்ப பிரபலம்.
சிம்பு, தனுஷ், ஆர்யா, ஜீவா, ஜெய் என இந்த லிஸ்ட்டில் உள்ள இளம் ஹீரோக்களை சொல்லிக்கொண்டே போகலாம். இதில் லேட்ட்ஸ்ட்டாக வந்து சேர்ந்திருப்பவர் ‘அட்டகத்தி’ ஹீரோ தினேஷ்.
கடந்த வாரம் ரிலீசான அவரது இரண்டாவது படம் தான் ‘குக்கூ’. இந்தப்படத்தின் சக்சஸ் மீட்டில் நேற்று பேசிய தினேஷ் மீது ஒரு பெண் நிருபர் சராமாரி குற்றச்சாட்டுகளை வைத்தார்.
முன்னதாக படத்தைப் பற்றிப் பேசிய தினேஷ் அட்டகத்தி டைரக்டர் ரஞ்சித் சார் மூலமாத்தான் இந்தப்படத்தோட சான்ஸ் எனக்கு கெடைச்சது. படமும் நல்ல சக்சஸ்புல்லா போறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் என்றார். அப்போது அவரிடம் “ குக்கூ படம் ஹிட்டாகியிருக்கு. அதுக்கு வாழ்த்து சொல்லி ரெண்டு வார்த்தை பேசலாம்னு பார்த்தா நீங்க போனையே எடுக்க மாட்டீங்கிறீங்களே? ஒரு படம் தான் ஹிட்டாகியிருக்கு அதுக்குள்ள பெரிய ஆளாயிட்டீங்களோ..? என்றார் ஒரு பெண் நிருபர்.
அதற்கு பதிலளித்த தினேஷ் “அப்படியெல்லாம் இல்ல மேம், நான் சினிமாவுக்குப் புதுசு. உங்களை மாதிரி நிருபர்கள் போன் பண்ணினா எப்படி பேசணும்னு எனக்குத் தெரியாது. பயமா இருக்கும். அதனால தான் எந்த போன் வந்தாலும் நான் எடுக்க மாட்டேன். என்னோட மேனேஜர்கிட்ட போனைக் குடுத்து பேசச் சொல்லிடுவேன்.
ஆனா எஸ்.எம்.எஸ் பண்ணினா உடனே ரிப்ளை பண்ணிடுவேன். மத்தபடி உங்களை புறக்கணிக்கணும்னு எனக்கு எண்ணம் கெடையவே கெடையாது மேம். எனக்கு கம்யூனிகேஷன் ப்ராப்ளம் இருக்கிறது உண்மை தான். இனிமே போன் பண்ணினா கண்டிப்பா எடுப்பேன். ஸாரி மேடம், என்னை நான் கரெக்ட் பண்ணிக்கிறேன் என்றார்.
அப்போ சரி, நீங்க பொழைச்சுக்குவீங்க தம்பி!